சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்து
சுகாதாரத் தரவுகள் நிறுத்தப்பட்டுள்ளதற்கு, தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் - கோப்புப் படம்
தமிழக சுகாதாரத் தரவுகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், உண்மைகளை மூடி மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலம் முழுவதும் நோய் பரவல் உள்ளிட்ட மிக முக்கியமான, மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இந்த தரவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதற்கு, சுகாதாரத் துறை நிபுணர்கள், அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இது பற்றி கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு, பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு மற்றும் புதிய தொற்று பரவல் குறித்த முக்கியத் தரவுகளை மாதந்தோறும் வெளியிடுவதை தமிழ்நாடு சுகாதாரத்துறை திடீரென நிறுத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் அடிப்படை உரிமையான தகவல் அறியும் உரிமைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் எதிரான தற்போதைய தவெக அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
தவெக அரசின் மருத்துவத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான இதழ்களை வெளியிடுவதை நிறுத்தியிருப்பதற்கும் எனது வன்மையான கண்டனங்கள்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல்' ஆட்சியில், மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு, தரவுகளின் அடிப்படையிலான வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு எப்போதும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், ஜனநாயகத்தில் உண்மைகளை மூடிமறைப்பது ஒருபோதும் தீர்வாகாது என்று தெரிவித்துள்ளார்.
Summary
Halting the release of health data! Concealing the truth is never a solution — Tamilachi’s view
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

