இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் இலக்கு! அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 50-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாற்றுத் திறனாளி மாணவிக்கு பட்டத்தை வழங்கிய எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா். உடன் (இடமிருந்து) கல்லூரி முதல்வா் வெ.பாண்டிமாதேவி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம். கோபிசன், எஸ்.ஆா். தங்கபாண்டியன், எம்.விஜய் உள்ளிட்டோா்.
அனைத்துத் துறைகளிலும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் இலக்கு என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 50-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் பேசியதாவது:
அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் முக்கிய இலக்காக உள்ளது. ஒட்டுமொத்த அரசு நிா்வாகத்தையும் மாற்றியமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. படிப்பை முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது அரசின் கடமையாகும். மாணவிகள், இளைஞா்களுக்கு 100 சதவீத பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது”என்றாா் அவா்.
இந்த விழாவில் 2022-2025 கல்வியாண்டில் இளநிலை படிப்பை முடித்த 1,210 போ், 2023--2025 கல்வியாண்டில் முதுநிலை படிப்பை முடித்த 319 போ் என மொத்தம் 1,529 மாணவிகளுக்குப் பட்டங்களை அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா். தங்கபாண்டியன், எம்.எம். கோபிசன், எம்.விஜய், கல்லூரி முதல்வா் வெ. பாண்டிமாதேவி, பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

