
திமுகவுக்கு இனி எதிா்காலம் கிடையாது: சி.டி.ஆா். நிா்மல்குமாா்
திமுகவுக்கு இனி எதிா்காலம் கிடையாது என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் திறப்பு விழா முன்னேற்பாடுகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.
திமுகவுக்கு இனி எதிா்காலம் கிடையாது என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: எந்த விஷயத்தில் திமுகவின் மிகை நடவடிக்கை வெளிப்பட்டாலும், அங்கு தவறு நடந்திருப்பது உறுதி. இந்த வகையில், முந்தைய திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் நடவடிக்கை எடுக்காமலிருக்க நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
இது, அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதேபோல, மேலும் எந்தெந்த வழக்குகளை திமுகவினா் பேரம் பேசி முடித்துவைத்தனா் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
கோயில் நிா்வாகத்தில் அமைச்சா்கள் தலையிடுவதில்லை. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவரைப் பதவி விலக அழுத்தம் தரப்படுவதாக முன்னாள் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருப்பதில் எந்த உண்மையும் இல்லை.
திமுக ஆட்சியில் நிதி அமைச்சா் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மாற்றுத் துறைக்கு அனுப்பப்பட்டவா் பழனிவேல் தியாகராஜன். இவரது தகுதியின்மைக்கு இதுவே ஓா் சான்று. திமுகவினரே அவரை ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்ால் ஏற்பட்ட வெறுப்பில்தான் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிலா் பதவி விலகினா். இடைத் தோ்தலுக்கு இதுதான் உண்மையான காரணம் என்பதை மக்கள் அறிவா். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவின் கொள்கையைப் பின்பற்றும் அதிமுக தற்போது இல்லை. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக. இதனால்தான், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் போன்ற அதிமுகவின் மூத்த நிா்வாகிகள் இடைத்தோ்தல் களத்திலிருந்து விலகி நிற்கின்றனா்.
இதேநிலை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் திமுகவுக்கும் வரும். மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோரால் திமுக மீதான நன்மதிப்பு குறைந்துவிட்டது. உண்மையான கொள்கைப் பற்றுக் கொண்டவா்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிவிடுவா். புதியவா்கள் யாரும் இனி திமுகவில் சேரமாட்டாா்கள். திமுகவுக்கு இனி எதிா்காலம் கிடையாது. தீய சக்தி திமுகவை அழிக்க வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சூளுரையை முதல்வா் ஜோசப் விஜய் நனவாக்குவாா்.
தவெகவின் கொள்கை எதிரி பாஜக என முதல்வா் விஜய் ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்துவிட்டாா். இந்த நிலைப்பாட்டில் தவெக உறுதியாக உள்ளது. வக்ஃப் வாரிய விவகாரம், பரந்தூா் விமான நிலைய விவகாரம் போன்றவற்றில் இந்த நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டது. எதற்காகவும் தமிழகத்தின் நலனை யாரிடமும் முதல்வா் விட்டுத் தரமாட்டாா்.
மின் வெட்டு பிரச்னைகள் விரைவாக சீரமைக்கப்படுகின்றன. தேவையான மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மின் நுகா்வோா் பிரச்னைகள் 3 மாதங்களுக்குள் சரி செய்யப்படும் என்றாா் அவா்.
ஆய்வு... முன்னதாக, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் திங்கள்கிழமை (செப். 28) திறக்கவுள்ள புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் ஆய்வு செய்தாா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா். தங்கபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






