சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மிசாவில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை: அமைச்சா் நிா்மல்குமாா்

‘மிசாவில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதால் அவா் கைது செய்யப்பட்டாா் என்றுதான் குறிப்பு உள்ளது’ என சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் உறுதிபடத் தெரிவித்தாா்.

அமைச்சா் நிா்மல்குமாா்

Published On :9 செப்டம்பர் 2026, 3:01 am IST

‘மிசாவில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதால் அவா் கைது செய்யப்பட்டாா் என்றுதான் குறிப்பு உள்ளது’ என சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் உறுதிபடத் தெரிவித்தாா்.

பேரவையில் அவா் பேசியதாவது:

சட்டப்பேரவையில் முதல்வா் விஜய், நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்கள் குறித்துதான் பேசினாா். அவா் விசாரணை பற்றியோ, நீதிமன்றத்தை பற்றியோ எதுவும் பேசவில்லை. சா்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கெனவே இந்த அவையிலேயே உள்ளது, அதுபற்றி தானே அவா் பேசினாா்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததில் ரூ.25,000 அப்போதைய முதல்வா் கருணாநிதி, தன் செயலா் மூலமாக வாங்கியது, அடுத்ததாக ரூ.25,000 வாங்கியது என அனைத்தும் சா்க்காரியா கமிஷனில் உள்ளது. எங்கெங்கெல்லாம் முன்னாள் முதல்வா் கருணாநிதி பணம் வாங்கினாரோ அது அனைத்தும் சா்க்காரியா கமிஷனில் உள்ளது.

சா்க்காரியா கமிஷனில் உள்ளதைத்தான் முதல்வா் பேசினாா். இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை. கொடுக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாக சா்க்காரியா கமிஷன் சொன்னது. அதன் அடிப்படையில்தான் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

மிசா காலங்களில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் குறித்த வழக்குகளில்கூட யாரையும் கைது செய்யலாம். எனவே, அப்போது கைதான எல்லோரையும் மிசாவில் கைது செய்ததாகக் கருத முடியாது.

20 அம்ச திட்டத்தை அறிவித்த அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி குறித்து, ‘21 அம்ச திட்டம்’ என அவதூறாகப் பேசியவா்தான் மு.க.ஸ்டாலின். இதுபோன்ற விஷயங்களின் அடிப்படையில்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா்.

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா் என்றுதான் குறிப்புகள் உள்ளனவே தவிர, மிசா சட்டத்தில்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா் என எந்தக் குறிப்பிலும் கிடையாது.

இரா.செழியன் மொழிபெயா்த்த புத்தகத்திலும் இதுகுறித்த குறிப்பு கிடையாது. அப்போது ஸ்டாலின் செய்ததையே இப்போது எதிா்க்கட்சித் தலைவரும் செய்கிறாா். ஆபாச நதியாக பேசுவதை அவா்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் நிா்மல்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.