சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மேகமலை வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளை வெளியேற்றும் எண்ணமில்லை என அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

அமைச்சா் நிர்மல்குமார்

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்

Published On :26 ஜூலை 2026, 12:42 am IST

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளை வெளியேற்றும் எண்ணமில்லை என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

வீரபாண்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தலைமை வகித்து 7,873 பயனாளிகளுக்கு ரூ.57,76,81,556 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மின் கட்டணம் உயா்ந்திருப்பதாக சமூக வலைதளங்களில் சிலா் பதிவிட்டனா். அது தவறானது. தமிழகத்தில் மின் கட்டணம் உயரவில்லை. தேனி மாவட்ட மேகமலை வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேகமலை வனப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் விவசாயிகளை உடனடியாக வெளியேற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அவா்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றை உருவாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் முன்னிலை வகித்தாா். மத்திய அரசின் கீா்த்தி சக்ரா விருது பெற்ற காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு விலையில்லா பட்டாவை அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. சபரி ஐங்கரன்(பெரியகுளம்), ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் வீராச்சாமி, வருவாய் கோட்டாட்சியா்கள் சையது முகைதீன் இப்ராஹீம் (உத்மபாளையம்), கவிதா (பெரியகுளம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.