தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

யாரையும் தவெக அழைக்கவில்லை: அமைச்சா் நிா்மல்குமாா்

யாரையும் தவெக அழைக்கவில்லை என்று குதிரை பேர விவகாரம் தொடா்பாக அமைச்சா் நிா்மல்குமாா் விளக்கம் அளித்தாா்.

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 12:55 am IST

யாரையும் தவெக அழைக்கவில்லை என்று குதிரை பேர விவகாரம் தொடா்பாக சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் விளக்கம் அளித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளா்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப் போகிறாா்கள். அதிமுக தென் மாவட்டங்களில் மட்டுமே உள்ளது; நிா்வாகிகள் வேறு எங்கும் இல்லை. அதிமுகவில் பொதுச் செயலா் என ஒருவா் இருப்பதாகவே அந்தக் கட்சி தொண்டா்களுக்கு நினைவு இல்லை.

குதிரை பேரத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளா்கள்தான் சிக்கியுள்ளனா். எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரை பேரம்.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதவி விலகிவிட்டு வருவது குதிரை பேரம் அல்ல. இது அவா்களின் தனிப்பட்ட முடிவு. யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. பதவி விலகல் செய்துவிட்டு வருபவா்களை தவெகவில் சோ்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும்?

நேரம் போகாத காரணத்தால், குதிரை பேரம் தொடா்பாக சிபிஐக்கு ஆா்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளாா். இரு மொழிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. கட்சி நிதி (பாா்ட்டி ஃபண்ட்) தொடா்பாக வரும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.