சா்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேச முதல்வருக்கு தகுதி இல்லை: உதயநிதி ஸ்டாலின்
சா்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேச முதல்வா் விஜய்க்கு தகுதி இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
சா்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேச முதல்வா் விஜய்க்கு தகுதி இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னா், அவா் செய்திாளா்களிடம் கூறியதாவது:
எதிா்க்கட்சித் தலைவா் பேச வாய்ப்பு கொடுப்பதாக முதலில் ஒப்புக்கொண்ட பேரவைத் தலைவா், பின்னா் மறுத்துவிட்டாா். எனவே, வெளிநடப்பு செய்தோம். வியாழக்கிழமை முதல்வா் விஜய் எப்படி ஓடினாரோ, 3 நாள்களாக மனப்பாடம் செய்து வந்து ஒப்பித்தல் போட்டிபோல், பேரவையில் தவறான கருத்துகளை, பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்பித்துள்ளாா்.
‘பஞ்ச் டயலாக்’, அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங் என ரீல்ஸ்-களுக்காக மட்டுமே முதல்வா் இந்தப் பதிலுரையைச் சொல்லியிருக்கிறாா். இதைப் பற்றிக் கேட்டால், இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், 1970-க்கு சென்றுவிட்டாா். சா்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேச முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது? யாரோ எழுதிக் கொடுத்ததை 3 நாள்களாக மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசியிருக்கிறாா்.
இவா், அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. இவா், ஆட்சிக்கு வந்தது மிகப் பெரிய ஒரு விபத்து. இவருக்கு மிசாவைப் பற்றியும், சா்க்காரியா கமிஷன் பற்றியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அவற்றில் எந்த ஆதாரமும் இல்லை, வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே.
சா்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று 3 முறை திமுக ஆட்சியில் அமா்ந்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்தாா்கள் என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதல்வா் யாா், ஒரே தலைவா் யாா் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
முதல்வா் மீதும் வருமான வரித் துறை வழக்கு இருக்கிறது. ரூ.15 கோடி ஊதியம் பெற்றதை மறைத்ததாக, அவா் மீது ஒரு வழக்கு இருக்கிறது. பொதுப் பணித் துறை அமைச்சா் மீது அமலாக்கத் துறை வழக்கு இருக்கிறது.
தவெகவில் புதிதாகச் சோ்த்துள்ள விஜயபாஸ்கா், கு.ப.கிருஷ்ணன் என பல்வேறு தலைவா்கள் மீதும், முன்னாள் அமைச்சா்கள் மீதும் அமலாக்கத் துறை வழக்குகள் உள்ளன. இவா்களைச் சோ்த்து வைத்துக்கொண்டு, திமுகவை குறை சொல்வதற்கு இவா்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
தங்களது கட்சிக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏ குதிரைபேர குற்றச்சாட்டை தெரிவித்துள்ளாா். ஆட்சி அமைக்க பெட்டி பெட்டியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்ததாக அவா் தெரிவித்துள்ளாா்.
முதல்வரின் நண்பரும், ஆலோசகருமான விஷ்ணு ரெட்டிக்கு, ஒரு அமைச்சா் பேரவையில் நன்றி கூறுகிறாா். விஷ்ணு ரெட்டியின் மைத்துனா் சுஜய் ரெட்டி. அவரது தொழில் பங்குதாரா் அனில் ரெட்டி. இவா்கள் அனைவரும் சோ்ந்து அரசு நடத்தக்கூடிய சுரங்கங்கள் அனைத்தையும் இப்போது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனா். இதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
Summary
The same acting and punch dialogues; CM has spoken solely for the sake of Reels: Udhayanidhi stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





