மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி

குழந்தைகளுக்கு கேக் ஊட்டும் முதல்வர், செஞ்சி சிறுமி பெற்றோருக்கு ஏன் ஆறுதல் கூறவில்லை? கனிமொழி

காணாமல் போன செஞ்சி சிறுமி குடும்பத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆறுதல் கூறியது பற்றி...

CM vijay did he not meet parents of the young girl from Gingee: Kanimozhi

செஞ்சி சிறுமி குடும்பத்துக்கு கனிமொழி ஆறுதல் - X

Updated On :

காணாமல் போன செஞ்சி சிறுமி குடும்பத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் - பவானி தம்பதியின் மகள் - ஏழு வயது சிறுமி ஹேமலதா, அக். 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனாா். 34 நாள்களாகியும் இதுவரை அவா் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று அந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி ஹேமலதா, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய மறுநாள் காலை முதல் காணவில்லை. சிறுமி காணாமல் போய் இன்றோடு 35 நாள்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த குழந்தையை கண்டுபிடிக்க அரசு உண்மையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார்.

"குழந்தையை காணோம் என்று சொன்ன உடனேயே பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினரும் விசாரிக்க தொடங்கியுள்ளனர். ஒரு குழந்தை காணாமல் போனால் அதை காணவில்லை என வழக்குப்பதிவு செய்யக் கூடாது. 24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட வழக்கு என பதிவு செய்ய வேண்டும். ஆனால் காணவில்லை என ஏன் பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை.

குழந்தைகள் நலத்துறையும், காவல்துறையும் முதல்வர் விஜய் அவர்களின் நேரடி பார்வையில் உள்ள துறைகள். இதே குழந்தைகளிடம் 'நண்பா, நன்பி என சொல்லி, குழந்தைகளை வீட்டில் போய் அடம்பிடியுங்கள் என சொல்லித்தான் ஓட்டு வாங்கி இந்த பதவியில் உட்கார்ந்துள்ளனர்.

நேற்று குழந்தைகளுக்கு கேக் ஊட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால் கேக் ஊட்ட போகும் முதல்வர், இந்த வீட்டிற்கு வந்து இந்த பெற்றோருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லியிருக்கலாம். 'கண்டிப்பாக குழந்தையை கண்டுபிடித்து தருவோம்' என சொல்லியிருக்கலாம். அவர் வர வேண்டாம், இங்குள்ள பொறுப்பு அமைச்சராவது வந்து ஆறுதல் சொன்னார்களா? மாவட்ட செயலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்.

35 நாள்கள் ஆகியும் பெற்றோருக்கு குழந்தை கிடைக்குமா? எங்கே இருக்கிறது என்று ஒரு சிறு தகவல்கூட, நம்பிக்கை தரும் வகையில் இல்லை.

திமுக சொன்ன பிறகுதான் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றினார்கள். திமுக சொன்னால்தான் இந்த அரசு செய்யுமா? அப்படியானால் திமுகவே நேரடியாக ஆட்சியில் இருக்கலாமே?

ஆட்சிக்கு வந்த பின் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடலூரில் மட்டும் ஒரே நாளில் எத்தனையோ குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். கல்லூரி மாணவிகள், வேலைக்கு போகும் பெண்கள், ஒரு குழந்தை, அவரது அம்மா என இருவரும் காணவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தலைவர் இதை வலியுறுத்துவார், சட்டமன்றம் நடந்தால் அங்கேயும் பேசுவார். ஆளுங்கட்சியினர் காவல்துறையை குற்றங்களை தடுக்க பயன்படுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

Summary

CM vijay did he not meet parents of the young girl from Gingee: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.