செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்

செஞ்சி சிறுமி காணாமல்போன வழக்கில் புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என பெ. சண்முகம் தெரிவித்திருப்பது குறித்து...

cpim p shanmugam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்

Updated On :

செஞ்சி சிறுமி காணாமல்போன வழக்கில் புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் புதன்கிழமை (அக். 28) தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல்போன வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், தற்போது வரை அந்த சிறுமிக்கு என்ன ஆனது? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெ. சண்முகம் பேசியதாவது:

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போவது என்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம். அது செஞ்சி சிறுமி மட்டுமல்ல; தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இதுமாதிரியான செய்திகள் மிக அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, தமிழ்நாடு காவல்துறையும் தமிழ்நாடு அரசும் காணாமல் போன குழந்தைகளை உடனியாக மீட்பதற்கும் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கக்கூடிய வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

காணாமல்போன அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட வேண்டும். ஏனென்றால் மேலூர் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். அதுமாதிரி இல்லாமக் காணாமல்போன குழந்தைகளை உயிருடன் மீட்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

செஞ்சி சிறுமியைப் பொறுத்தவரையில், சிபிசிஐடி க்கு வழக்கு ஒப்படைத்த பிறகும் தற்போதுவரை அந்த சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம். பிறந்த நாளன்று வீட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறார். என்ன நடந்தது என்பதே புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மர்மமாகவே உள்ளது. எனவே, புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Communist Party of India (Marxist) State Secretary Pe. Shanmugam stated on Wednesday (Oct. 28) that the investigation into the case of the missing girl from Gingee must be intensified.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.