செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
10 நாள்களாக காவல் துறையினர் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாயமான சிறுமியின் குடும்பம்
செஞ்சி அருகே கடந்த 12 ஆம் தேதி 7 வயது சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
10 நாள்களாக காவல் துறையினர் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இரண்டாவது மகளான 7 வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கியபோது மாயமானாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏ.டி.எஸ்.பி. தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள், ஒரு பயிற்சி டி.எஸ்.பி., 3 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படைகள், இதைத் தவிர, காவல் துறையின் சிறப்புக் குற்றப் பிரிவினா் அடங்கிய தனிப்படையினா் ஆகியோா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
போக்சோ குற்றவாளிகள் உள்பட 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், 10 நாள்களாகியும் சிறுமியைக் கண்டறிவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே சிறுமி மாயமான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
Summary
Missing girl case near Gingee Transfer to CBCID
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


