ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!
ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலியானது பற்றி.....

சம்பவம் நடைபெற்ற இடம்.
ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி 10 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு பலியானதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தின் சீஹி கிராமத்தில் நேஹா என்கிற 3 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே மற்ற குழந்தைகளுடன் விளையாடியிருக்கிறார். அப்போது அந்த சிறுமி 250 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
சுமார் 10 மணி நேரம் நீடித்த மீட்புப் பணிக்குப் பிறகு, திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் சிறுமி வெளியே கொண்டு வரப்பட்டார். இருப்பினும், மீட்கப்பட்டபோது சிறுமியின் உடலில் எந்த அசைவும் இல்லை. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சிறுமியின் உடல் தற்போது கூராய்வு செய்யப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு ஃபரிதாபாத் நகராட்சிக்குச் சொந்தமானது என்றும், சுமார் 15 ஆண்டுகளாக அது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது என்றும் சிறுமியின் தந்தை ராம்டின் தெரிவித்தார்.
Summary
The girl was playing with other children near the borewell when she fell into it. A tractor was parked nearby, and the children had climbed onto it while playing. The girl allegedly slipped from the tractor and fell into the borewell.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






