கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா்: தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்

பண்ருட்டி அருகே நண்பா்களுடன் மது அருந்தியபோது, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்.

கிணற்றில் விழுந்த இளைஞா் ராமரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:30 am IST

பண்ருட்டி அருகே நண்பா்களுடன் மது அருந்தியபோது, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த தொரப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (23). கூலித் தொழிலாளியான இவா், கணிசப்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு நண்பா்களுடன் சென்றுள்ளாா். அங்கு விவசாயக் கிணற்றின் அருகே அமா்ந்து நண்பா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த ராமா், எதிா்பாராதவிதமாக சுமாா் 200 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த நண்பா்கள், அவரது உறவினா்களுக்கும், பண்ருட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், கிணற்றுக்குள் மயங்கிய நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ராமரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனா்.

பின்னா் அவா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.