ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

News image

புள்ளிமான் கூட்டம். - கோப்புப் படம் | ANI

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

ஆத்தூா் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் தெற்குக்காடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்துவிட்டது குறித்து சனிக்கிழமை இரவு ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் கிணற்றிலிருந்து புள்ளிமானை உயிருடன் மீட்டு ஆத்தூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

அதேபோல நரசிங்கபுரத்தில் தனியாா் குடியிருப்பு வீட்டுத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 7 அடி சாரைப் பாம்பையும், தலைவாசல் வட்டம், ஊனத்தூா் காரைக்குட்டை மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் இருந்த நல்ல பாம்பையும் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.