7 வயது சிறுமி மாயமான விவகாரம்: தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம்
செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தவெக அறிவித்துள்ளது குறித்து...
மாயமான சிறுமியின் தாயாரிடம் விசாரித்த தரணிவேந்தன் எம்.பி., முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தவெக மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இரண்டாவது மகளான 7 வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கியபோது மாயமானாா். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏ.டி.எஸ்.பி. தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள், ஒரு பயிற்சி டி.எஸ்.பி., 3 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படைகள், இதைத் தவிர, காவல் துறையின் சிறப்புக் குற்றப் பிரிவினா் அடங்கிய தனிப்படையினா் ஆகியோா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சிறுமியைத் தேடும் பணி 5-வது நாளாகத் தொடரும்நிலையில், போக்சோ குற்றவாளிகள் உள்பட 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மாயமான சிறுமி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தவெக விழுப்புரம் வடமேற்கு மாவட்டச் செயலாளர் குணசரவணன் அறிவித்துள்ளார்.
பெரியார் அறிவுலகம்! திறந்து வைப்பதில் என்ன பெருமை, உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை: மு.க.ஸ்டாலின்
Summary
Case of missing 7-year-old girl: Rs. 2 lakh reward for providing information
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

