பாதுகாப்புப் படை வீரர்கள் 84 பேருக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?
மணிப்பூரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 84 பேருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து...

மணிப்பூரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 84 பேருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
மணிப்பூரில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 84 பேருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து மணிப்பூருக்கு கடந்த புதன்கிழமை (அக். 14) வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், மேற்கு இம்பால் மாவட்டத்தின் லாம்சாங் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா ஆகியவற்றை சாப்பிட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 84 பேருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 84 வீரர்களும் உடனடியாக இம்பாலில் உள்ள பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ரிம்ஸ்) அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், வீரர்களின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையினால் வீரர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் கொந்தௌஜம் கோவிந்தாஸ் சிங் ஆகியோர் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
In Manipur, 84 Border Security Force personnel have reportedly fallen ill suddenly and have been admitted to a hospital.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


