இந்தியா - வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மாயம்!
அஸ்ஸாம் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மாயமானது பற்றி...

கோப்புப் படம்
அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் இந்தியா - வங்கதேச எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மாயமானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாமின் ஹரிநகர் எல்லைப் பகுதி வழியே 4, 5 நபர்கள் கால்நடைகளை கடத்த முயல்வதாக எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தலைமை காவலர் ஜிதேந்திர யாதவ் மற்றும் காவலர் கே. வேணு ஆகிய இரு எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அந்தப் பகுதிக்கு சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடிப்பதறகாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடிக்க முயன்றபோது, அந்த நபர்கள் தப்பிக்கும் நோக்கில் ஆற்றில் குதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரும் ஆற்றில் இறங்கித் தேடத் தொடங்கினர். சிறிது நேரத்தில் ஜிதேந்திர யாதவ் மட்டும் கரைக்குத் திரும்பிய நிலையில், மற்றொரு வீரரைக் காணவில்லை.
இந்த நிலையில், அவரைத் தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நபர்கள் அவரை வங்கதேசத்திற்குக் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Summary
Border Security Force soldier goes missing on the India-Bangladesh border!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


