கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)! இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்துநவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து

பாஜக வேட்பாளர் தோல்வி: கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அகற்றம்!

ராஜஸ்தானில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அகற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பற்றி...

கோப்புப் படம்

Updated On :

ராஜஸ்தானில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அகற்றப்பட்டதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள டோங்க் மாவட்டத்தில் பீப்லு பகுதிக்குள்பட்ட ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் நிவாய் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம் சஹாய் வர்மாவின் உதவியாளரான அலோக் சர்மாவின் மனைவி பிரியங்கா சர்மா பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர், தனது போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளர் தன்னா லாலிடம் 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு அங்குள்ள ஒரு கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளை மின்சாரத் துறை ஊழியர்கள் அகற்றியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

நெடு நாள்களாக அப்பகுதி இருளில் இருந்ததாகவும் தேர்தல் பிரசாரத்தின் போது அக். 24 அன்று இந்தத் தெருவிளக்குகள் நிறுவப்பட்டு இருளைப் போக்கியதாகவும் மக்கள் கூறினர். இந்த நிலையில், பாஜக வேட்பாளர் தேர்தலில் தோற்றதால் தற்போது விளக்குகள் அகற்றப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால், பீப்லுவில் உள்ள மின்சாரத் துறை உதவிப் பொறியாளர் கோவர்தன் சௌத்ரி, தெருவிளக்குகள் அனுமதியின்றி நிறுவப்பட்டதால் அவற்றை அகற்றியதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மற்ற வார்டுகளிலும் அனுமதியின்றி நிறுவப்பட்ட தெரு விளக்குகளை அகற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தெரு விளக்குகள் அகற்றப்பட்டதில் தனக்கோ அல்லது வேட்பாளரான தனது உதவியாளரின் மனைவிக்கோ எந்தப் பங்கும் இல்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் ராம்சஹாய் வர்மா குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Summary

BJP candidate's defeat: More than 50 street lights removed in the village!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.