மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளிலும் பாஜக முன்னிலை!

மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றிருப்பது பற்றி...

modi

கோப்புப்படம்

Published On :

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக முன்னிலை வகித்து வருகின்றது.

ரெஜிநகா் பாஜக வேட்பாளர் சகராவ் சர்க்கார், நௌடா பாஜக வேட்பளார் ஹசிராணி ரத் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

ரெஜிநகரில் மொத்தம் 15 சுற்றுகளில் 4 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக வேட்பாளர் சகராவ் சர்க்கார் 35,896 வாக்குகள் பெற்று, இரண்டாமிடத்தில் உள்ள ஆம் ஜனதா உன்னயன் கட்சி வேட்பாளர் ராபினை விட 23,189 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இதேபோல், நௌடா தொகுதியில் 15 சுற்றுகளில் 6 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. பாஜக வேட்பளார் ஹசிராணி ரத் 66,415 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாமிடத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானைவிட 49,922 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

Summary

BJP leading in both constituencies in West Bengal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.