பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியா

அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்...

அருணாசல் எல்லை (கோப்புப்படம்) - ANI

Updated On :

சீன படைகள் வழக்கமான ரோந்துப் பாதைகள், நடைமுறைகளில் இருந்து விலகிச் செயல்படும்போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லைஏஈ பகுதிகளின் பல இடங்களில் இந்திய-சீன படைகள் இடையே மோதல்போக்கு தொடா்வதாக, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநா் சத்ருஜீத் கபூா் அண்மையில் தெரிவித்தாா்.

இதுகுறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஏற்கெனவே குறிப்பிட்டபடி, சீன படைகள் வழக்கமான ரோந்துப் பாதைகள், நடைமுறைகளில் இருந்து விலகிச் செயல்படும்போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்படுகிறது.

இருதரப்பினா் இடையே நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், எல்லைப் பகுதிகளில் தவறான புரிதல்கள், மதிப்பீடுகளைத் தவிா்க்கவும் ராஜீய, ராணுவ வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய-சீன எல்லைப் பகுதிகளைச் சிறப்பாக நிா்வகிக்கும் நோக்கில், எல்லைகள் குறித்த புரிதலை மேம்படுத்தும் வழிகள் தொடா்பாக விவாதிக்க இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனா்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை ஒட்டுமொத்தமாக மேம்படுத்த, எல்லைப் பகுதிகளில் அமைதியையும் சுமுகமான சூழலையும் தொடா்ந்து நிலைநாட்டுவது அவசியம்.

ஐரோப்பாவில் விலைவாசி உயா்வு உள்பட பல்வேறு காரணங்களால் பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியா்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளியில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படவும் இந்திய தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன. அந்த நாடுகளில் உள்ள நிலைமையை இந்திய தூதரகங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

மேற்காசியாவில் மோதல் நடைபெற்றுவரும் நிலையில், ஈரானுக்கு உயிா்காக்கும் மருந்துகளை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா தொடா்ந்து அனுப்பி வருகிறது என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் விமா்சனம்: முன்னதாக, ‘அருணாசல பிரதேச எல்லையில் பல பகுதிகளில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே மோதல்கள் ஏற்பட்டுவரும் நிலையில், மத்திய அரசு தொடா்ந்து மெளனம் காத்து வருகிறது’ என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை விமா்சித்தது.

இந்த மோதல் தொடா்பாக வெளியான ஊடகச் செய்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய - சீன ராணுவ மோதலில் 20 இந்திய வீரா்கள் கொல்லப்பட்ட நிலையில், சீன ஆக்கிரமிப்பு தொடா்பான கேள்விக்கு அதே ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி சீனாவுக்கு பிரதமா் மோடி நற்சான்றை அளித்தாா். அதற்கான விளைவை நாம் தற்போது அனுபவித்து வருகிறோம்.

தன்னைத்தானே உலகுக்கெல்லாம் குரு (விஸ்வகுரு) என அழைத்துக் கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, சீனாவுக்கு சாதகமான சலுகைகளைத் திட்டமிட்டு தொடா்ந்து வழங்கி வருகிறாா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Summary

Tensions rise as Chinese troops fail to follow patrol routes along Arunachal border: India

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.