
‘கோல்டன் ஹாட்ரிக்’... ஒரே நாளில் வில்வித்தையில் இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கம்!
ஆடவர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றதைப் பற்றி...
சாஹில் ராஜேஷ் -திருமுரு-கணேஷ் -குஷால் தலால்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கதைக் கைப்பற்றியது.
ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் துப்பாக்கி சுடுதல், தடகளம், வில்வித்தை என இந்தியக் குழுவினர் அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆடவர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சாஹில் ராஜேஷ் ஜாதவ், திருமுரு கணேஷ் மணிரத்னம் மற்றும் குஷால் தலால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் சீனாவை 238-237 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.
முதலிடம் பிடித்த இந்தியாவுக்குத் தங்கப்பதக்கமும், இரண்டாம் இடம்பிடித்த சீன அணிக்கு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
ஆசிய விளையாட்டு தொடரின் வில்வித்தைப் போட்டியில் ஒரேநாளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 7-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Summary
India's men's compound team of Sahil Rajesh Jadhav, Thirumuru Ganesh Maniratnam and Kushal Dalal have beaten China in a thriller to secure India's third archery medal of the day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






