போக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

22 மாதங்கள் தடை; பதக்கம் பறிப்பு: விடாமுயற்சியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பர்வீன் ஹூடா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா குறித்து...

Indian athlete Parveen Hooda

இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டையில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா முன்னேறியுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மகளிருக்கன 65 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா 5-0 என சீனாவின் லி ஷுவை வீழ்த்தினார்.

முன்னதாக ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற பர்வீன் பதக்கம் பிடுங்கப்பட்டது. சர்வதேசப் பரிசோதனை முகமையின் ஊக்கமருந்துக்கான சோதனையின்போது அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லாததால் அவருக்கு 22 மாதங்கள் தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேரி கோம், லாவ்லினோ வரிசையில் மூன்றாவது முறையாக மகளிர் குத்துச்சண்டையில் பர்வீன் ஹூடா இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் சீன தைபேயி வீராங்கனையுடன் மோதவிருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 48 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 5 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் கிடைத்துள்ளன.

Summary

Parveen Hooda enters Asian Games boxing final after dominant 5-0 win over Li Shu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.