ஆசிய விளையாட்டு: வில்வித்தை கலப்பு இரட்டையரிலும் தங்கம் வென்றது இந்தியா!
ஆசிய விளையாட்டின் வில்வித்தை கலப்பு இரட்டையரிலும் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியைப் பற்றி...
சாஹில் - சிகிதா.
ஆசிய விளையாட்டின் வில்வித்தை கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தனிபார்த்தி சிகிதா மற்றும் சாஹில் ராஜேஷ் ஜாதவ் இவரும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியில் தென்கொரியாவுடனான இறுதிப்போட்டி இந்திய அணியினர் மோதினர். இந்த ஆட்டம் 157-157 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.
அதன்பின்னர் யார் வெற்றியாளர் என்பதைத் தீர்மானிக்கும் பரபரப்பான ஷூட்-ஆஃபில் தென் கொரியாவை 20-19 என்ற கணக்கில் தோற்கடித்து சிகிதா மற்றும் சாஹில் இருவரும் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் பிரிவில் தங்கத்தை வென்றனர்.
சாஹில் ஜாதவ் மற்றும் சிகிதா தனிபார்த்தி இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் 2028 ஒலிம்பிக்கிற்கான இடத்தையும் உறுதிசெய்துள்ளனர்.
ஏற்கனவே, புதன்கிழமை காலை நடைபெற்ற மகளிர் காம்பவுண்ட் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா ஆகியோர் அடங்கிய அணியினர் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி முதலிடம் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தது.
Summary
The Indian mixed compound archery team comprising Chikitha Taniparthi and Sahil Jadhav won the Asian Games gold after they defeated Korean duo of Park Jungyoon and Choi Yonghee at the Okazaki Chuo Sogo Park Multipurpose square on Wednesday. The winner was decided by shootout after the contest had ended 158-157.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





