பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

இந்தியாவுக்கு 21ஆவது பதக்கம்: வெண்கலம் வென்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்கள் குறித்து...

Table tennis mixed doubles pair wins bronze

வெண்கலம் வென்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்கள் - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்கள் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்கள். இத்துடன் இந்தியாவுக்கு 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

டேபிள் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் கலப்பு இரட்டையர்கள் பிரிவில் இந்தியாவின் சார்பாக மனுஷ் ஷா & தியா சிதலே சீனாவின் வாங் சி ஹுகின் சன்னி இங் கில் உடன் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் 0–4 (8–11, 5–11, 8–11, 2–11) என்ற கேம்களில் இந்திய இணையினர் தோல்வியுற்றனர். இருப்பினும் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

இதுவரை 2 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தமாக 21 பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளன. கபடி மற்றும் ஸ்குவாஷ் பிரிவில் நான்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Table Tennis Mixed Doubles – Semifinal bronze medals at the 2026 Asian Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.