ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனிலுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தது குறித்து...

Elavenil Valarivan

இளவேனில் வாலறிவனுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து - X | TN Lok Bhavan

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஆளுநர் பதிவிட்டிருப்பதாவது, "ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் நபர் பிரிவில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவரது மிகச்சிறந்த செயல்திறன், அர்ப்பணிப்பு, விளையாட்டுச் சிறப்பானது நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளது. அவரது சாதனை ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இந்திய இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாய் இருக்கிறது.

இளவேனில் வாலறிவன், வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளைப் பெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Governor RV Arlekar congratulates Elavenil Valarivan on winning a silver medal at the Asian Games

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.