
ஆசிய விளையாட்டு: கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்தியர்கள்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் வரலாறு படைத்த இந்தியர்கள் குறித்து...

ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்றவர்கள். - படம்: எக்ஸ் / சாய் மீடியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்களின் ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் வரலாற்றிலேயே முதல்முறையாக கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள்.
ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரினாஸ் தலிவால் இணைந்து இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்கள்.
ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இது இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆடவர், மகளிர் அணிகள் வெண்கலம் வென்றிருந்தன. தற்போது, கலப்பு இரட்டையர் பிரிவிலும் பதக்கம் வென்றுள்ளார்கள்.
இந்தப் பிரிவில் சீனர்கள் தங்கம் பதக்கமும் தென் கொரியர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றார்கள். கத்தார், சீனா, இந்தியா, தென் கொரியா டாப் 4 அணிகளாக இறுதிப் போட்டிகளில் பங்கேற்றார்கள்.
இந்தியர்கள் முதல் சுற்றில் 24 இலக்குகளில் 21 முறையும் சீனர்கள் 23 முறையும் தென் கொரியர்கள் 22 முறையும் இலக்குகளையும் தாக்கி அசத்தினார்கள். பலமாக காற்று வீசியபோதிலும் இந்தியர்கள் அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சுற்றில் நருகா 24ல் 23 இலக்குகளை சரியாகத் தாக்கினார். மொத்தமாக 44 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றனர். 52 புள்ளிகளுடன் சீனா தங்கமும் 51 புள்ளிகளில் தென் கொரியா வெள்ளியும் வென்றது.
ð¥ A NEW CHAPTER IN INDIAN SHOOTING! ð®ð³
— SAI Media (@Media_SAI) September 24, 2026
Parinaaz Dhaliwal & Anantjeet Singh Naruka make history at the #AsianGames2026, securing ð¥ Bronze in the Skeet Mixed Team event!
⨠Indiaâs FIRST-EVER Asian Games medal in Skeet Mixed Team!
A historic shot. A historic podium. A proud⦠pic.twitter.com/yLknU4GNL6
Summary
Anantjeet-Parinaaz clinch historic skeet mixed-team bronze for India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






