அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

51 வயது வரைக்கும் போர்ச்சுகல் அணியில் விளையாடுவேன்: ரொனால்டோ

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேட்டி குறித்து...

Portugal's forward #07 Cristiano Ronaldo gives a thumbs up as he warms up ahead of the 2026 World Cup round of 16 football match between Portugal and Spain at the Dallas Stadium in Arlington on July 6, 2026. (Photo by Thomas COEX / AFP)

கிறிஸ்டியானோ ரொனால்டோ - AFP

Published On :

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, “நான் ஓய்வுபெற வேண்டுமென சிலர் தொலைக்காட்சிகளில் பேசுகிறார்கள். ஆனால், என்னால் இப்போதும் கோல் அடித்து அணிக்கு உதவ முடியும்” எனக் கூறியுள்ளார்.

போர்ச்சுகல் அணிக்காக 41 வயதாகும் ரொனால்டோ இன்றிரவு தனது 234ஆவது போட்டியில் விளையாட இருக்கிறார். நேஷன்ஸ் லீக் போட்டியில் வேல்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.

போர்ச்சுகல் அணி இதுவரை கால்பந்து உலகக் கோப்பையை வென்றதில்லை. 2026ல் அந்த அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினிடம் தோல்வியுற்று வெளியேறியது.

இந்தத் தோல்வியுடன் ரொனால்டோ ஓய்வு பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து விளையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. 979 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ விரைவில் 1,000 கோல்கள் அடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

வேல்ஸ் உடனான போட்டி லிஸ்பனில் நடைபெற இருக்கிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ பேசியிருப்பதாவது:

நிச்சயமாக நான் எனது வருங்காலம் குறித்து எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். அணியின் தலைவர் மற்றும் பயிற்சியாளருடன் இது குறித்து பேசியிருக்கிறேன்.

போர்ச்சுகல் அணிக்கு தேவையானதை இப்போதும் என்னால் செய்ய முடியுமென நம்புகிறேன். என்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்தால் நான் முடித்துக்கொள்வேன்.

இது புதிய இளம் தலைமுறை. ஆனால், பொதுவான விஷயம் என்னவென்றால் என்னால் இப்போதும் களத்தில் கோல் அடித்து அணி வெற்றி பெற உதவ முடியும் என்பதே. உலகம் முழுவதும் மட்டுமல்ல சொந்த மண்ணிலும் எனக்கு வரவேற்பு இருக்கிறது.

போர்ச்சுகல் ரசிகர்களுக்கும் என்னைப் பிடிக்கிறது. ஆனால், சில தொலைக்காட்சியில் மட்டும் என்னை விமர்சிப்பது புரிந்துகொள்ள முடியவில்லை. நான் தேசிய அணிக்கு வரக்கூடாதென அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆனால், நான் அதனைக் கண்டுக்கொள்வதில்லை. 20 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன்.

என்னை நேசிக்கும் மனிதர்களை மட்டுமே நான் எனது ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன். சிறுவர்கள் ஏன் என்னை நேசிக்கிறார்கள் என்று தெரியும். ஏனெனில் அவர்கள் என்னை எடுத்துக்காட்டாக நினைக்கிறார்கள். நான் இதனைத் தொடர்வேன். இன்னும் 10 ஆண்டுகள் விளையாடினாலும் இதனைச் செய்ய முடியும் என சிரித்துக்கொண்டே கூறினார்.

41 வயதாகும் ரொனால்டோ 10 ஆண்டுகளில் 51 வயதிலும் விளையாடுவேன் எனக் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Summary

Cristiano Ronaldo says he can still score for Portugal though knows critics want him out of team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.