நான் மீண்டும் வாகனம் ஓட்டுவேன்; ஆனால்.. குருகிராம் பெண் பகிர்ந்த தகவல்!!
நான் மீண்டும் இரு சக்கர வாகனம் ஓட்டுவேன், ஆனால் பதற்றமாக இருக்கும் என குருகிராம் பெண் கூறியுள்ளார்.

இரு சக்கரவாகனம் - பிரதி படம் - ens
குருகிராமில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சியா என்ற பெண்ணை, வெள்ளை நிற சேடன் வாகனத்தில் வந்தவர் இடித்துவிட்டு நிற்காமல் சென்ற விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசியிருக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மிகத் தைரியமாக, இரு சக்கர வாகனங்களை இயக்கி வந்த சியா, இனியும் தான் நிச்சயம் வாகனங்களை இயக்குவேன், ஆனால், அச்சத்துடனும், ஒருவித பதற்றத்துடனும்தான் ஓட்ட முடியும் என்கிறார். மேலும், தில்லி, குருகிராம் சாலைகளில் என்னால் பயத்துடன் வாகனம் ஓட்டவே முடியாது என்றும் விவரிக்கிறார்.
பெண்ணின் வாகனத்தில் இருந்த கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவான நிலையில், அதனைக் கொண்டு பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், அந்தப் பெண்ணை இடித்துச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் கல்யான் பெயின்சலா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக தைரியமாக, துணிச்சலுடன் மிகப்பெரிய கியர் பைக்குகளைக் கூட சாதாரணமாக இயக்கி வந்த சியா, இனி தன்னால் அதே துணிச்சலுடன் வாகனங்களை இயக்கவே முடியாது. எனக்கு பதற்றமாக இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிறன்று, சியா வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றபோது, கைதான நபர், அந்த இரு சக்கர வாகனத்துக்கு மிக அருகே தன்னுடைய காரை இடிப்பது போல வந்து பெண்ணை மிரட்டியதோடு நில்லாமல், அவரது பைக்கை இடித்துவிட்டுச் சென்றுவிட்டார். இதில் நிலைதடுமாறி சியா கீழே விழுந்தார்.
அந்த விடியோ முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பார்ப்பவர்கள் பலருக்கும் ஆத்திரம் வரவைப்பதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




