சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

கேரள முதல்வரைச் சந்தித்த கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் சகோதரி!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சகோதரி கேரள முதல்வரைச் சந்தித்தது குறித்து...

Ronaldo with his sister; Ronaldo's sister with the Chief Minister of Kerala.

சகோதரியுடன் ரொனால்டோ, கேரள முதல்வருடன் ரொனால்டோவின் சகோதரி. - படங்கள்: இன்ஸ்டா / ரொனால்டோ, எக்ஸ் / விடி சதீஷன்.

Updated On :

போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சகோதரி கேரள முதல்வரைச் சந்தித்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது) தற்போது சௌதி அரேபியாவில் நடைபெறும் சௌதி லீக்கில் அல்நாசர் கிளப்பில் விளையாடி வருகிறார். விரைவில் ஓய்வு பெறவிருப்பதாகக் கூறியுள்ளார்.

கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (978) அடித்தவராக கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். விரைவில் 1000 கோல்கள் அடிப்பாரென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தனது நீண்டநாள் காதலியை ரொனால்டோ கரம்பிடித்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அதில் மூத்த சகோதரியான எல்மா அவெய்ரோ (53 வயது) கேரளத்திற்கு வந்திருந்தார்.

இந்தியாவிலேயே கேரளத்தில் கால்பந்து விளையாட்டுக்கென ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். கொல்கத்தா, அஸ்ஸாம் போன்று இங்கும் அதிகளவு கால்பந்து ரசிகர்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.

கேரளம் வந்த எல்மா அவெய்ரோ அம்மாநிலத்தின் முதல்வரான விடி சதீஷனை சந்தித்து பேசினார். இந்த விடியோவை விடி சதீஷனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சகோதரியான எல்மா அவெய்ரோவைச் சந்தித்தேன். கேரள மக்கள் கால்பந்தையும் ரொனால்டோவையும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். கேரள கால்பந்து ரசிகர்களுக்கு தனது அழகான மகிழ்ச்சியான வாழ்த்தைப் பகிர்ந்துகொண்டார் எனக் கூறியுள்ளார்.

இதுவரை போர்ச்சுகல் அணி உலகக் கோப்பையை வெல்லாமல் இருக்கிறது. ரொனால்டோ தனது கடைசி உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடிவிட்டார். ஓய்வுக்கு முன்பாக 1,000 கோல்களை நிறைவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Summary

Cristiano Ronaldo's sister Elma visits Keralam, meets CM Satheesan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.