ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நீண்ட நாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடித்தார் ரொனால்டோ!

நீண்ட நாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடித்த கால்பந்து வீரர் ரொனால்டோவைப் பற்றி...

News image

நீண்ட நாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடித்த ரொனால்டோ.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 8:08 am IST

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார்.

போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும் கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு அலானா மார்டினா மற்றும் பெல்லா எஸ்மெரால்டா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு கூச்சி பேக் விற்பனையகத்தில் விற்பனையாளரான ஜார்ஜினாவை முதல்முறையாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையில், 2017 ஆம் ஆண்டு நவம்பரில், ஜார்ஜினா மகள் அலானா மார்டினாவைப் பெற்றெடுத்தார். அதற்கு முன், ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ரொனால்டோ ஜூனியர் மற்றும் மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஐந்து குழந்தைகளையும் ஜார்ஜினா மற்றும் ரொனால்டோ இருவரும் வளர்த்து வருகின்றனர். நீண்டகாலமாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இருவரும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள மேற்கு போர்ச்சுகலின் கடலோர நகரான கஸ்காய்ஸில் நேற்று (ஆக. 12) தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

தனது திருமண புகைப்படங்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சர்வதேச கால்பந்தில் போர்ச்சுகல் அணிக்காக 146 கோல்களை அடித்து, அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ள ரொனால்டோ, 5 முறை பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார்.

சமீபத்தில், ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடி சாதனை படைத்த அவர், சௌதி புரோ லீக்கில் அல் நஸ்ர் அணிக்காக வருகிற சனிக்கிழமை முதல் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Cristiano Ronaldo and Georgina Rodríguez are married. The Portuguese football star and Rodríguez tied the knot in an intimate civil ceremony in Cascais, Portugal, on August 11, 2026, after nearly 10 years together.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.