
வில்வித்தையில் உலகச் சாதனையுடன் தங்கம் வென்றது இந்திய மகளிரணி!
ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் தங்கம் வென்ற இந்திய மகளிரணியைப் பற்றி...
ஜோதி சுரேகா, சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப். - ஏபி
ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் இந்திய மகளிரணி தங்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
வில்வித்தை போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் ஆகியோர் அடங்கிய அணியினர் இறுதிப் போட்டியில் வலிமைமிக்க சீனாவை 238 - 234 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தனர்.
சீனாவின் வுனியர், யூ வாங் மற்றும் ஃபாங்யாவோ வெய் ஆகியோர் அடங்கிய அணி இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
நடப்பு தொடரில் 6 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 52 பதக்கங்களை வென்று இந்திய அணி 10 ஆம் இடத்தில் இருக்கிறது.
Summary
The Indian women's compound archery team delivered a sensational performance to beat China and retain the Asian Games gold medal with a world-record score here on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




