ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது பற்றி...
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு - X
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 6 மாதங்களாக தமிழ்நாட்டுக்கு முழுநேர ஆளுநர் இல்லாமல் இருந்த நிலையில் ஆர்.வி. ஆர்லேகரை தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நியமித்து உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
X
இதையடுத்து ஆளுநருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் முதல்வர் விஜய் ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் விஜய் சென்றார். அவர் ஆளுநர் ஆர்லேகரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்தும் ஆளுநருடன் முதல்வர் விஜய் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.
Summary
Chief Minister Vijay meets Governor R.V. Arlekar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

