உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!
வங்கக் கடலில் உருவாகும் ‘அக்வான் புயல்’ தமிழகத்தில் கரையைக் கடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் தகவல்...

புயல் சின்னம் உருவாகிறது - கோப்புப் படம்
வங்கக் கடலில் உருவாகும் ‘அக்வான் புயல்’ தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் வங்கக் கடலில் உருவான “அர்னாப்” மற்றும் “முரசு” ஆகிய புயல்கள் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் கரையைக் கடந்தன. இதனால், தொடர்ந்து இருமுறை அம்மாநிலம் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளது.
இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும், சென்னை உள்ளிட்ட வடக்குக் கடலோர மாவட்டங்களில் வழக்கத்துக்கும் குறைவான மழைப்பொழிவே பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு வங்கக் கடலில் நிலவும் தீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து அடுத்த 18 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமசந்தர் கணித்துள்ளார்.
இதுபற்றி, இன்று (நவ. 14) காலை அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“தெற்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் தீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் அடுத்த 18 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்
நவ 16 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதியிலேயே புயலாக வலுவடைய வாய்ப்பு. எனவே தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதை நாளை முதல் நவம் 20 ஆம் தேதி வரை தவிர்க்க வேண்டும்.
தென்மேற்கு வங்கக் கடல், இலங்கைக் கடல் பகுதி, தெற்கு மத்திய வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நவ.15 முதல் சூறைக்காற்று, கடல் கொந்தளிப்பு அதிகரிக்கக் கூடும். நவ 16, 17 ஆகிய தேதிகளில் புயல் ஒரே இடத்தில் நிற்கும் போது கடல் கொந்தளிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், வங்கக் கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல் எண்ணூர் மற்றும் கடலூர் இடையே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Hemachandar has stated that 'Cyclone Akwan,' which is forming in the Bay of Bengal, may make landfall in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


