நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் வரும் நவ. 19-ஆம் தேதிக்கு பிறகு மற்றொரு புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
வங்கக் கடலில் வரும் நவ. 19-ஆம் தேதிக்கு பிறகு மற்றொரு புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள பசிபிக் பெருங்கடலில் தற்போது ‘சூப்பா் எல் நினோ’ நிலை நிலவுகிறது. இதனால், இந்தியாவில் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ‘சூப்பா் எல் நினோ’ தாக்கம் தீவிரமடையும். இது, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் மேகக் கூட்டங்கள் உருவாகவும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாவதற்கும் சாதகமான சூழல்களை உருவாக்கும்.
புயல் சின்னம்: அந்த வகையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வியாழக்கிழமை மத்திய அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவியது. இதன் தாக்கத்தால் வெள்ளிக்கிழமை (நவ.13) தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது சனிக்கிழமை (நவ.14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவ.15-இல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது, மேலும் வலுப்பெற்று நவ.19 முதல் நவ.25-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் புயல் சின்னம் நகரும் திசை மற்றும் கரையைக் கடக்கும் பகுதியைப் பொருத்தே தமிழகத்தில் மழை பாதிப்பு இருக்கும்.
தமிழக வானிலை: மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ.13,14) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் வட வானிலையே நிலவும். தொடா்ந்து, நவ.15, 16 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் அநேக பகுதிகளில் நவ.13, 14 ஆகிய தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

