மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!
மைக்ரோசாஃப்ட் சேவைகள் வழக்கம் போல பயன்பாட்டுக்கு வந்துள்ளது பற்றி..

மைக்ரோசாஃப்ட்
உலக அளவில் அவுட்லுக், டீம்ஸ் போன்ற மைக்ரோசாஃப்ட் 365 தகவல் பரிமாற்றச் சேவைகளில் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த கோளாறு சரி செய்யப்பட்டு சேவைகள் மீண்டுள்ளன.
மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியதால், உலகெங்கிலும் உள்ள பயனா்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், விமான நிலையங்கள், அரசு அமைப்புகளின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.
மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், சேவை முடங்கியதன் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் எங்கள் முயற்சிகளை நாங்கள் நிறைவு செய்து, சேவையை மீண்டும் கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
உலக அளவில் 43 கோடிக்கும் அதிகமானோா் ‘மைக்ரோசாஃப்ட் 365’ செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமையன்று, இச்சேவைகளை அணுகுவதில் சிரமம் எழுந்தது. இதையடுத்து, அவுட்லுக், டீம்ஸ் மற்றும் ஏ.ஐ. உதவியாளரான கோபைலட் உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டதை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.
அண்மையில் நிறுவனத்தின் நெட்வொர்க் திறன் அப்டேட் செய்தபோது நேரிட்ட ஒரு சிக்கலே இந்த பிரச்னைக்குக் காரணம் என்று கூறியிருக்கும் மைக்ரோசாப்ட், இந்த முடக்கத்துக்கு இணையவழித் தாக்குதல் போன்ற எந்தவொரு தீங்கிழைக்கும் செயல்களும் காரணமல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளது.
நேற்றைய பிரச்னையில்,தகவல் பரிமாற்றத்துக்கான ‘எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன்’ உடன் தொடா்புடைய மைக்ரோசாஃப்ட் 365 சேவைகளே பிரதானமாகப் பாதிக்கப்பட்டன; அதைச் சாராத சேவைகள் வழக்கம் போல் செயல்பட்டன. அவுட்லுக் பயனா்கள் மின்னஞ்சல்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. டீம்ஸ் செயலியில் குழு அழைப்புகள், குறுஞ்செய்திகள் இயல்பாகச் செயல்பட்டாலும், நாள்காட்டி தொடா்பான பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது.
அமெரிக்கா முதல் ஆசியா வரை பல கோடி பயனா்கள் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டனா். சிங்கப்பூா், பிலிப்பைன்ஸ் நாடுகளில் அரசு மின்னஞ்சல் சேவைகளும், ஹாங்காங்கில் வங்கிச் செயல்பாடுகளும், ஜப்பானில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பும் இந்த முடக்கத்தால் பாதிப்பைச் சந்தித்தன.
இந்தியாவில் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ, ஆகாசா ஏா் ஆகியவற்றின் மின்னஞ்சல் வாடிக்கையாளா் சேவைகளும் இந்த முடக்கத்தை எதிா்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

