மைக்ரோசாஃப்ட் முடக்கம்! தில்லியில் விமான சேவைகள் பாதிப்பு!

மைக்ரோசாஃப்ட் சர்வர் முடக்கத்தால் தில்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது பற்றி...

delhi airport

கோப்புப்படம்

Updated On :

மைக்ரோசாஃப்ட் சர்வர் முடக்கம் காரணமாக தில்லியிலிருந்து இயக்கப்படவிருந்த மூன்று விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று ரத்து செய்துள்ளது.

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மைக்ரோசாஃப்ட் சேவைகள் செயலிழப்பு, அவுட்லுக், டீம்ஸ் மற்றும் பிற மைக்ரோசாஃப்ட் 365 செயலிகள் முடங்கியுள்ளன.

மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவைகள் முடங்கியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அலுவலகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளது. உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பிற நிறுவனங்களில் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் சர்வர் முடக்கம் காரணமாக தில்லியிலிருந்து இயக்கப்படவிருந்த மூன்று விமானங்களை ரத்து செய்திருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தில்லியிலிருந்து புணே, லே மற்றும் மும்பைக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், தில்லியிலிருந்து தர்பங்கா மற்றும் மும்பை புறப்படவிருந்த விமானங்கள் தாமதமாகப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மைக்ரோசாஃப்ட் முடக்கத்தால் பயணிகளின் மின்னஞ்சல்களை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், சேவைகள் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்வதாகவும், பயணிகள் நேரடியாக உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னதாகத் தங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Summary

Microsoft outage! Flight services in Delhi affected!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.