காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தீபாவளி விடுமுறை எதிரொலி: நாளை சென்னை மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை!தீபாவளி விடுமுறை: நாளை (நவ. 9) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!

காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!

காற்று மாசு காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது பற்றி...

chennai airport

சென்னை விமான நிலையம் - (கோப்புப்படம்)

Updated On :

தீபாவளியையொட்டி மக்கள் பட்டாசு வெடித்ததால் காற்றுமாசு ஏற்பட்ட நிலையில், சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் திங்கள்கிழமை காலை முதலே மழை விட்டு விட்டு பெய்த நிலையில், பட்டாசு வெடிப்பது சற்று குறைந்திருந்த நிலையில், மாலையில் மழை விட்டவுடன் மக்கள் அதிகளவிலான பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.

இதன் எதிரொலியாக உலகளவிலான காற்றின் தரக் குறியீட்டு வரைபடத்தில் சென்னையில் காற்றின் தரக் குறியீடு கடுமையான பிரிவில் இடம்பெற்றது.

நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, உலகளவில் காற்று மாசுபாட்டில் முதலிடம் பிடித்த சென்னை நகரின் காற்றின் தரக் குறியீடு 907 புள்ளிகளாக அபாய கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் புகைமூட்டம் சூழ்ந்ததால், நேற்றிரவு விமானங்கள் தரையிறங்க முடியாமலும், புறப்பட முடியாமலும் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பல்வேறு நகரங்களிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரையிறங்கின.

மேலும், சென்னையிலிருந்து புறப்படவிருந்த 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று நள்ளிரவு தாமதமாக இயக்கப்பட்டன.

Summary

Air pollution! Flight services in Chennai affected!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.