பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு!

சௌதி அரேபியா உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

IndiGo extends cancellation of flights to Saudi Arabia

இண்டிகோ விமானம்... - கோப்புப் படம்

Updated On :

சௌதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அந்நாட்டு உடனான இண்டிகோ விமான சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில், ஹௌதி கிளர்ச்சிப்படைக்கும், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் வெடித்துள்ளது. மேலும், சௌதி அரேபியாவின் மீதும் ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சௌதி அரேபியா உடனான விமான சேவைகளை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விமான நிறுவனங்கள் தொடர்ந்து ரத்து செய்து வருகின்றன.

இந்த நிலையில், சௌதி அரேபியா உடனான விமான சேவைகளின் ரத்து வரும் அக்.31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும்; ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்கள் உடனான இண்டிகோ விமான சேவை வரும் அக்.27 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியத் தூதரகம் இன்று (அக். 23) அறிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத், தம்மாம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைக் குறிவைத்து ஹௌதிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தம்மாம் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில், இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதேபோல், சௌதி உடனான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவைகளும் வரும் அக்.24 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. சௌதி அரேபியாவில் சுமார் 27 லட்சம் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், இந்திய விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Summary

IndiGo has announced that it is extending the suspension of its flights to Saudi Arabia due to the ongoing unrest in the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.