ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் இன்று காலமானார்

ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் - dps
உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ். கர்ணன், உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
உடல்நலக் குறைவால், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், 1955ஆம் ஆண்டு பிறந்தவர் சி.எஸ். கர்ணன். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு, கடந்த 2016 -ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 2017ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற சி.எஸ். கர்ணன், சென்னையில் வசித்து வந்த நிலையில், இன்று காலமானார்.
சிறைத் தண்டனை!
தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ஏற்க மறுத்ததால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு சென்ற கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவே கைது ஆணை பிறப்பித்தார். இதனால், அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை ஏற்க மறுத்த அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தொடுத்தது. அதுமட்டுமன்றி 6 மாத கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, 6 மாத கால சிறைவாசம் அனுபவித்ததும் நினைவுகூரத்தக்கது.
Summary
Retired High Court Judge C.S. Karnan passed away in Chennai today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

