தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

உச்ச நீதிமன்றத்தில் 3-ஆக உயரும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை விரைவில் 3 ஆக உயரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Supreme Court

உச்ச நீதிமன்றம் - file photo

Published On :

குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சுனிதா அகர்வாலை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயரவுள்ளது.

சுனிதா அகர்வாலுடன், தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் ஆகியோரும் விரைவில் உச்ச நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு சில நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நீதிபதி சுனிதா அகர்வால் 1990 டிசம்பரில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். 21 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், நவம்பர் 2011-இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், ஆகஸ்ட் 2013-இல் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். இவர் பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட மத்தியஸ்தர் ஆவார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் குறித்த பயிற்சி பெற்ற முதல் குழுவில் ஒருவராக அவர் இருந்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது பெண் நீதிபதிகளாக ஆகஸ்ட் 31, 2021 அன்று முதல் பதவியில் உள்ள நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் இந்த ஆண்டு ஜூன் 2 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற வெங்கட சுப்ரமணி மோகனா ஆகியோர் உள்ளனர்.

நீதிபதி சுனிதா அகர்வால் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற பின், அவரும் நீதிபதி நாகரத்னாவும் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட நீதிபதிகளாக இருப்பார்கள்.

நீதிபதி மோகனா நேரடியாக வழக்கறிஞர் துறையிலிருந்து பதவி உயர்வு பெற்றவர். அவர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

நீதிபதி நாகரத்னா வருகிற 2027-ஆம் ஆண்டில் ஒரு மாத காலத்திற்கும் மேல் இந்தியாவின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகிக்கவுள்ளார்.

Summary

Number of female judges in the Supreme Court to rise to three!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.