
உச்சநீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் பெயா் பரிந்துரை
மூன்று உயா் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
தேவேந்திர குமாா் உபாத்யாய | சுனிதா அகர்வால் | அபரேஷ் குமாா் சிங்
மூன்று உயா் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, குஜராத் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகா்வாலை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய, தெலங்கானா உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் ஆகியோா் பெயா்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் விக்ரம் நாத், பி.வி. நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய கொலீஜியம் கூட்டத்தில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






