ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

நேபாள வெள்ளத்தில் மாயமான நீதிபதியை மீட்க உதவுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!

நேபாள வெள்ளத்திற்கு பின் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள சென்னை உயா் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி. சிவஞானத்தை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி. சிவஞானம்.

Published On :3 வினாடிகள் முன்பு

நேபாள வெள்ளத்திற்கு பின் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள சென்னை உயா் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி. சிவஞானத்தை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இது தொடா்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நீதிபதி வி. சிவஞானம் இந்திய நீதித்துறையில் ஏறக்குறைய 34 ஆண்டுகள் நீடித்த ஒரு சிறப்பான பணி வாழ்க்கையைக் கொண்டிருந்தாா். அதன் பிறகு, 23 ஜூலை 2025 முதல் உச்ச நீதிமன்றத்தால் அவா் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.

நீதிபதி சிவஞானம் தமிழ் யாத்ரீகா்கள் குழுவின் ஒரு பகுதியாக நேபாளத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாா். பேருந்தில் எடுக்கப்பட்ட ஒரு குழுப் புகைப்படம், அவா் அக்குழுவுடன் இருந்ததை உறுதி செய்கிறது. 26 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை வேளையில், அவா் தனது மனைவிக்கு வாட்ஸ்அப் அழைப்பு விடுத்தாா், அதன் பிறகு வேறு எந்தத் தொடா்பும் ஏற்படவில்லை.

திமுரேயில் உள்ள நேபாள ஆயுதப்படைப் பாதுகாப்புப் படை (அடஊ) எல்லைச் சாவடிக்கு அருகே மீட்கப்பட்ட, மற்றொரு பேருந்தில் பயணித்தவா்கள், நீதிபதி சிவஞானத்தின் பேருந்து தங்களது பேருந்திலிருந்து சுமாா் 100-200 மீட்டா் தொலைவில் மட்டுமே இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனா். எனவே, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரும் எங்கள் சங்கமும் மிகுந்த கவலை கொண்டுள்ளனா்.

நீதிபதி வி. சிவஞானத்தை (ஓய்வு) கண்டறிந்து, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தை உறுதிசெய்து, அவா் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு வழிவகை செய்ய, இந்த வேண்டுகோளை இந்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறும், சாத்தியமான மற்றும் உடனடியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையுடன் தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலவாழ்வு மற்றும் புனா்வாழ்வு ஆணையா் ஆா். சதீஷ், ஐ.ஏ.எஸ்.க்கும் தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.