நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்! கொலீஜியம் பரிந்துரை
கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றம்...

உச்ச நீதிமன்றக் கொலீஜியம் - file photo
நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகளை நியமிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோரையும் உள்ளடக்கிய கொலீஜியம், அக்டோபர் 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி. சாம் கோஷியை தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்தது.
தற்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி மானஷ் ரஞ்சன் பதக், குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தபபிரதா சக்ரவர்த்தியை தெலங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் சிங்கை, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


