படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்! 37 ஆக உயர்ந்த நீதிபதிகள் எண்ணிக்கை!

உச்சநீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

உச்சநீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதன்மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

இது அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையான 38-ஐ விட ஒன்று குறைவாகும்.

நீதிபதிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க செப். 28 அன்று பரிந்துரை செய்திருந்தது.

சட்டம் மற்றும் நீதித்துறையின் உரிய சரிபார்ப்புக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் ஆகியோர் புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சுனிதா அகர்வால்

நீதிபதி சுனிதா அகர்வால், 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி பிறந்தார். இவர், 1990 டிசம்பரில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டவர். 21 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், நவம்பர் 2011-இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், ஆகஸ்ட் 2013-இல் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். இவர் பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட மத்தியஸ்தர் ஆவார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் குறித்த பயிற்சி பெற்ற முதல் குழுவில் ஒருவராக அவர் இருந்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி நாகரத்னாவுக்குப் பின்னர், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுனிதா அகர்வால், இந்தியாவின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக இவர் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. 2032-ல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தலைமை நீதிபதியாகப் பதவியில் இருப்பார்.

நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா

ஜூன் 16, 1965-ல் பிறந்த நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, 2011-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2023-ல் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற அவர், இந்தாண்டின் தொடக்கத்தில் தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பான விவகாரங்களில் அவர் நிபுணராகக் கருதப்படுகிறார்.

நீதிபதி அபரேஷ் குமார் சிங்

நீதிபதி அபரேஷ் குமார் சிங் ஜூலை 7, 1965-ல் பிறந்தவர். 2012-ல் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023-ல் திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அதைத் தொடர்ந்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றார்.

3 நீதிபதிகளும் இவ்வார இறுதியில் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது. இதுவரை அதிகபட்ச பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை இதுவே.

Summary

The Central Government issued a notification today for the appointment of three new judges to the Supreme Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.