எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரை ஞானேஷ் குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...

Supreme Court Refuses to Pass Interim Order to Suspend CEC Gyanesh Kumar

ஞானேஷ் குமார் | உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையரை ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனாஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையரை ஞானேஷ் குமார் இடைநீக்கம் தொடர்பான இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஞானேஷ் குமார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இரு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷிக்கும் மத்திய அரசுக்கும் இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை தேர்தல் ஆணையர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. அந்தவகையில், ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்தால் அந்த உத்தரவுகளை திரும்பப் பெற நேரிடும் என்றும் கூறியுள்ளது.

அதாவது, தேர்தல் ஆணையம் எடுக்கும் ஏதேனும் ஒரு முடிவு சட்டத்திற்கு முரணாக இருப்பது கண்டறியப்பட்டால், அதை ரத்து செய்வோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Summary

Supreme Court Refuses to Pass Interim Order to Suspend CEC Gyanesh Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.