
எங்களைக் கைது செய்ய பாஜக அரசு திட்டம்! போராட்டம் தொடர வேண்டும்! சிஜேபி
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்களைக் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் பதிவு....

மும்பையில் சிஜேபி போராட்டம் நடத்தியபோது... - ENS
தில்லி போராட்டத்திற்கு முன்னதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் கூறியுள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியில் வருகிற அக். 10 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"என்னையும், அபிஜீத், அசுதோஷ், ரத்னா மற்றும் பிற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்களைக் கைது செய்ய இந்த அரசு திட்டமிட்டுள்ளது.
இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசு நினைத்தால், அது அவர்களின் தவறு.
இளம் தலைமுறை விழிப்புடன் உள்ளது. நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமது உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
சிறைவாசத்தையோ அல்லது அதைவிட மோசமான சூழலையோ எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால், இது ஒரு பெரும் தவறான நடவடிக்கையாக அமையும். இளைஞர்கள் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
போராட்டங்கள் தொடர வேண்டும். அக்டோபர் 10-ஆம் தேதி முதல் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றுகூடிப் போராடுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ð¨URGENT NEWSð¨
— Saurav Das (@SauravDassss) October 4, 2026
The government is planning on arresting me, Abhijeet, Ashutosh, Ratna and other Cockroach Janta Party leaders.
If the government thinks that such dictatorial actions will work, then they are mistakened! The young generation has awakened. We appeal to everyone toâ¦
Summary
The govt is planning on arresting Cockroach Janta Party leaders: Saurav Das
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







