ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!மதுராந்தகம் இடைத்தேர்தல்! முதல்வர் விஜய்யின் சாலைவலம் தொடங்கியது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக வந்த மாணவர் அமைப்பினர் கைது...

Students have been arrested in Delhi Jantar Mantar

மாணவர் அமைப்பினர் கைது... - X

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக வந்த மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி இந்தியா முழுவதுமே போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் அமைப்புகள் இன்று தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை முதலே தில்லியில் ஜந்தர் மந்தர், தேர்தல் ஆணைய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜந்தர் மந்தரில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

நேஹா போரா

நேஹா போரா - X

இதனிடையே திட்டமிட்டபடி இன்று பிற்பகல் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி பேரணியில் ஈடுபட்ட எஸ்எஃப்ஐ, டிஒய்எஃப்ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். அனைத்திந்திய மாணவர் அமைப்பின் தேசிய தலைவர் நேஹா போராவும் கைது செய்யப்பட்டார்.

போராட்டக் களத்திற்கு வந்தவர்கள் அனைவரும் போராட்டத்தை முன்னெடுக்கும் முன்னரே போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லப்பட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி முன்னாள் முதல்வர் அதிஷி

தில்லி முன்னாள் முதல்வர் அதிஷி - X

அதேபோல ஆம் ஆத்மி கட்சியினரும் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய நிலையில் தில்லி முன்னாள் முதல்வர் அதிஷி, கட்சி தலைவர் சௌரப் பரத்வாஜ், எம் பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக போராட்டம் அறிவித்துள்ளதையடுத்து தில்லியில் 12 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன, ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றியுள்ள 1.5 கிமீ சுற்றளவில் இன்று இரவு 9 மணி வரை இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Students protest in Delhi Jantar Mantar against Gyanesh Kumar have been arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER