
இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி!
இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி விடியோ அழைப்பில் பேசியது பற்றி....
இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேச்சு - ANI
துபை விமானத்தில் நடுவானில் சக விமானியால் தாக்குதலுக்கு ஆளாகியும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி விடியோ அழைப்பில் பேசினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு கடந்த புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.
இதையடுத்து இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் என உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய விமானியை 'ஹீரோ' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
விடியோ அழைப்பில் கேப்டன் ஸ்மித், தனது அனுபவத்தையும், துரிதமாக செயல்பட்டது பற்றியும் சம்பவத்தின்போது தனக்கு தைரியம் அளித்த விஷயங்களையும் பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டார்.
பிரதமர் மோடி, விமானியின் துணிச்சலான செயலைப் பாராட்டியதுடன் அவர் விரைந்து குணமடையவும் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், "நாடு முழுவதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து வருகிறது. உங்களுக்காகவும் உங்கள் உடல்நலத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன. உங்களுடைய துணிச்சல், சமயோசித புத்தி, நிதானம் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இந்தியர்கள், உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, மாறாக மற்றவர்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தவர்கள் என்று இந்த நாடு பெருமையுடன் கூறலாம்" என்று கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் ஸ்மித் மச்சார் தற்போது சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
PM Modi spoke to India brave pilot Captain Smit Machchaar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






