தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

12 ஆண்டுகளை நிறைவுசெய்த 'மேக் இன் இந்தியா'! பிரதமர் மோடி பெருமிதம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளிலும் நல்ல மாற்றம் அடைந்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தது குறித்து...

PM Modi highlights Make in India’s 12-year journey

12 ஆண்டுகளை நிறைவுசெய்த 'மேக் இன் இந்தியா' - X | PM Modi

Published On :

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, இத்திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளிலும் இந்தியா நல்ல மாற்றத்தை அடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, செப்டம்பர் மாதத்தில் 'மேக் இன் இந்தியா' தொடங்கப்பட்டது. நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பது, முதலீடுகளை ஈர்ப்பது, புத்தாக்கத்தை ஊக்கப்படுத்துவது, வணிக வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவது ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவுசெய்யப்பட்டு, நாடு நல்ல மாற்றம் அடைந்திருப்பதாக பிரதமர் மோடியின் சமூக ஊடகப் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் மேலும் பல தயாரிப்புகள்; மேலும் பல முதலீடுகள்; மேலும் பல ஏற்றுமதிகள். நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட ஒரு மாற்றம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி விகிதத்தையும் பதிவிட்டுள்ளார்.

2014-ல் ஏறக்குறைய ரூ. 690 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற்போது ரூ. 38,400 கோடியாக உயர்ந்து, 5,500 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டங்களின்கீழ் ஏற்றுமதி செய்யப்பட்டவற்றின் மூலம் ரூ. 15.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. மேலும், நாட்டில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 99.2 சதவிகிதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை.

Summary

PM Modi highlights Make in India’s 12-year journey

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.