
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம்! அரசின் கருவூலத்துக்குச் செல்லாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்
யுபிஐ பரிவர்த்தனைகளில் 0.4 சதவிகித கட்டண விதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - PTI
யுபிஐ பரிவர்த்தனைகளில் 0.4 சதவிகித நடவடிக்கையில் அரசின் கருவூலத்துக்கு எந்தத் தொகையும் வராது எனவும், இதில் அரசின் பங்கு எதுவுமில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனை மீதான கட்டண விதிப்பு குறித்து செய்தியாளருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான கட்டணம் குறித்து எதிர்க்கட்சிகள் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்தக் கட்டணங்கள் வரியோ செஸ்ஸோ இல்லை என்பதை வணிகர்களும் மக்களும் நன்கு அறிந்துள்ளனர்.
யுபிஐ பரிவர்த்தனைகள் மீது அரசு எந்த கூடுதல் கட்டணத்தையும் விதிக்கவில்லை. இதிலிருந்து பெறப்படும் கட்டணம், அரசின் கருவூலத்துக்கு செல்லாது. ரூ. 2,000-க்கு அதிகமான பரிவர்த்தனைகளில் வசூலிக்கப்படும் 0.4 சதவிகித கட்டணமானது வங்கிகள், க்யூஆர் சேவை வழங்குநர்கள், பிஓஎஸ் மெஷின் வழங்குநர்கள், வணிகர்களின் வங்கிகளுக்கு பகிரப்படும். இது அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பரஸ்பர முடிவு.
இந்தக் கட்டணமானது, வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது. உதாரணமாக, ரூ. 5,000-க்கு நீங்கள் ஒரு பொருள் வாங்கினால், கட்டண ரசீதில் கட்டப்பட வேண்டிய தொகையும் ஜிஎஸ்டி மட்டுமே இருக்கும்; எம்டிஆர் இருக்காது. நுகர்வோரிடமிருந்து எம்டிஆர் கட்டணத்தை வணிகர்கள் வசூலிக்க மாட்டார்கள். இந்த நடவடிக்கையில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று தெரிவித்தார்.
Summary
MDR on UPI payments above Rs 2,000 will not be passed on to customers, says Finance Minister Nirmala Sitharaman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





