அமித் ஷாவின் ஏஜென்ட்தான் தலைமைத் தேர்தல் ஆணையர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியது குறித்து...

Congress Chief Manickam Tagore accuses the CEC Gyanesh Kumar
Published On :

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் பதவி விலக வலியுறுத்தி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது, "இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்கும் முதன்முறை வாக்காளர்களான 18 வயது ஜென் ஸீ இளைஞர்களிடமிருந்து வாக்குரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் சேர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டு வந்திருப்பது இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 1958-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைமுறையில் இருந்துவந்த வருடாந்திர சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SSR) 2024 ஜனவரிக்குப் பிறகு முடக்கி வைத்து, லட்சக்கணக்கான புதிய தலைமுறை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணையவிடாமல் இவர் தடுத்து நிறுத்தி வந்திருப்பது ஆதாரங்களுடன் தற்போது அம்பலமாகியுள்ளது

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்தும், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஆளும் பாஜகவின் பிடிக்குள் சிக்கிச் சீரழிக்கப்பட்டு வருவது குறித்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ராகுல் காந்தி எச்சரித்து வந்த உண்மை இப்போது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெளிவாகப் புரிந்துவிட்டது

இளைஞர்களின் மாற்றத்துக்கான குரலையும், மோடி அரசின் அநீதிகளை எதிர்க்கும் இளைஞர் சக்தியையும் தேர்தல் களத்துக்கு வரவிடாமல் திட்டமிட்டுத் தடுக்கும் அற்ப அரசியலில் தலைமை ஆணையர் ஈடுபட்டு வந்தது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைத்து, லட்சக்கணக்கான இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் துரோகத்தில் ஈடுபட்டு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை விட்டு வெளியேற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Congress Chief Manickam Tagore accuses the CEC Gyanesh Kumar of preventing young people from voting in the election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.